திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கையும் களவுமாக மாட்டிய பிறகும் தொடர்ந்த கள்ள உறவு; கணவன் செய்த வெறிச்செயல்..!!
நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியில் வசிப்பவர் செல்வகுமார். இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சசிகுமார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதிவழக்கம் போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை. எனவே அவரது பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.
அப்போது சசிகுமார், இன்னும் சிறிது நேரத்தில் வீடு திரும்பிவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
அடுத்த நாள் திங்கட்கிழமை அதிகாலை, அந்த ஊரின் அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் சசிகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சசிகுமாருக்கு பெண்கள் சிலருடன் தாங்காத உறவில் இருந்துள்ளார். இந்த தவறான தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத சசிகுமார், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக கூறி பெண்களைத் தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உறவில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்ட பெண் ஒருவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவர், இருவரையும் எச்சரித்துள்ளார். அதன் பிறகும் அவர்கள் தொடர்பைக் விடாமல் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், சசிகுமாரை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சசிகுமாரின் செல்போனில் பேசியவர்கள் யார் யார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.