அண்ணா பல்கலை., குற்றவாளி ஞானசேகரன் விவகாரம்; மேலும் புதிய வழக்கு.. அதிகாரிகள் விசாரணை.!



Chennai Anna University accused Gnanasekaran Mambalam Stolen FIR Investigation 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சாலையோர பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் புகுந்து திருடி கார், வீடு போன்றவற்றை வாங்கி குவித்த சம்பவமும் அம்பலமானது. இதுதொடர்பாக புகார்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் பேரில் நடைபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Anna university

மாம்பலம் பகுதியில் திருட்டு நடந்ததாக வழக்கு

இந்நிலையில், 2013 ல் தி.நகர் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கிலும் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதுகுறித்து ஞானசேகரனிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முன்னெடுத்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; யார் அந்த சார்? தெரிந்தது உண்மை? குற்றப்பத்திரிகையில் தகவல்.!

இந்த விஷயத்துக்காக நீதிமன்றத்தில் அனுமதி வாங்க, ஞானசேகரன் இன்று புழல் சிறையில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்தார். விரைவில் அவரிடம் மாம்பலம் காவல் துறையினரும் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.

இதையும் படிங்க: கூடா நட்பு கேடில் முடிந்தது.. அண்ணா பல்கலை., விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் திருட்டு கூட்டாளி கைது.. பகீர் தகவல் உள்ளே.!