வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தூக்கத்தில் மாயமான இளம் பெண்... பெற்றோர் அதிர்ச்சி.! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை !
தர்மபுரி மாவட்டத்தில் வீட்டில் தூங்க சென்ற இளம் பெண் காணாமல் போன விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாது. கூடித்தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி இரவு அனைவரும் உணவு அருந்திய பின் உறங்கச் சென்றனர். அப்போது இவரது இளைய மகள் பொற்கொடியும் உறங்கச் சென்று இருக்கிறார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தீவிரமாக தேடி உள்ளனர் எங்கு தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பொற்கொடியை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை யாரும் கடத்திச் சென்றார்களா.? இல்லை என்றால் காதல் போன்ற விவகாரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.