"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மனைவியையும் குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்: உறவினர்கள் கதறல்..!
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் அருகேயுள்ள பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பச்சைவாழி. இவர்களுக்கு 1 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை உண்டு. இன்று காலை திடீரென உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்ட தியாகராஜன், வீட்டிற்கு வந்து அனைவரையும் அழைத்துச் செல்லுமாறு கவலையுடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தியாகராஜன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டினுள் தியாகராஜன், அவரது மனைவி பச்சைவாழி மற்றும் இரண்டு குழந்தைகளும் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமை காரணமாக மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு ஆட்டோ டிரைவர் தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூரணாங்குப்பம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.