உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது.! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கமலா ஹாரிசும்,தமிழிசை சௌந்தரராஜனும்.!



award-for-thamilisai

தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்ததுடன் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கை குழு என்ற அமைப்பு விருது அறிவித்திருந்தது. 

இந்த விருதுக்காக உலகம் முழுவதிலிலுமிருந்து 20 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் வழங்கப்பட்டது. பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

thamilisaiதமிழிசை குறித்து விருது விழாவில் அறிமுகப்படுத்தும்போது, மருத்துவராக இருந்து பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உயர்ந்து பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துவருகிறார் என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்த விருதை பெற்றுக்கொண்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 
 கூறுகையில், குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார். தலைசிறந்த 20 பெண்களுக்கான விருதை தமிழிசை சவுந்தராஜனுடன் இணைந்து பெற்றவர்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது