#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முறையாக சபாநாயகர் ஆகிறார் பாஜக-வை சேர்ந்த எம்.எல்.ஏ.!
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் வேட்பாளராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வாகியுள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்காக முதல்வர் மற்றும் கட்சியினருடன் சென்று சட்டப்பேரவைச் செயலரிடம் பாஜக எம்எல்ஏ செல்வம் நேற்று மனுத் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 13-ம் தேதி தொடங்கியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜவுக்கு 16 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. மேலும் இந்தக் கூட்டணிக்கு 3 சுயேச்சைகள், 3 நியமன எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 22 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எதிர்க் கட்சிகளான திமுகவுக்கு 6, காங்கிரசுக்கு 2 என 8 எம்எல்ஏக்கள் பலம் மட்டுமே உள்ளது.
இதனால் புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் போட்டி இருக்காது. எனவே போட்டியின்றி பாஜக எம்எல்ஏ செல்வம் சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் 21ஆவது பேரவை தலைவராக செல்வம் பொறுப்பேற்க உள்ளார். புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ முதல்முறையாக சபாநாயகராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.