#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பல நாட்களாக ஆசிரியையை பாத்ரூமில் படம்பிடித்த 16 வயது சிறுவன்.. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
56 வயதான தனது ஆங்கில டியூஷன் டீச்சரை பாத்ரூமில் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே, அலங்கர் பகுதியில் 16 வயதுடைய ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில், சிறுவனுக்கு ஆங்கில பாடம் சரியாக வராததால் அவரது பெற்றோர் ஆங்கில பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்காக 56 வயதான பெண் ஆசிரியை டியூஷன் எடுக்க வரவழைத்தனர்.
இதையடுத்து பெண் ஆசிரியை கடந்த 5 ஆண்டுகளாக சிறுவனுக்கு தினமும் ஆங்கில டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுவன் ஆசிரியை ரகசியமாக அவர்கள் வீட்டு பாத்ரூமில் செல்போன் பயன்படுத்தி படம் படம்பிடித்துள்ளான். அத்துடன் ஒருநாள் பாத்ரூமிற்கு ஆசிரியை சென்றபோது, அங்கு செல்போனில் சிறுவன் படம் பிடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், உடனே அந்த செல்போனை பிடுங்கி எடுத்து வந்து அவரது பெற்றோரிடம் காண்பித்து, சிறுவன் செய்த வேலையைப் பாருங்கள் ஐந்து வருடமாக டியூஷன் எடுத்து என்ன பிரயோஜனம் என தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரியை அந்த படத்தை நீக்குவதற்காக, செல்போனில் உள்ளே சென்று பார்க்கும் போது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஆசிரியை, பாத்ரூமில் இருக்கும் படங்களை சிறுவன் பல நாட்களாக எடுத்து வந்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுவன் மீது ஆசிரியை காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.