"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கொரோனா அச்சுறுத்தல்: ஆனாலும் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அதிர்ச்சி!
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ், இந்தியாவிலும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில்,இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது.
பல நாடுகளில் இந்த கொடூர வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தை தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும் சென்னை பிராட்வே குறளகம் அருகே நேற்று போராட்டம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.