#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்ற டிப்பர் லாரியில் மோதிய கார்.. முன்பகுதி அப்பளம் போல நொறுங்கி கோரவிபத்து...! இருவர் மரணம்..! 6 பேர் படுகாயம்..!
கார் மீது லாரி மோதிய கோரவிபத்தில் இருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் செல்ல முடிவு செய்தார். இதனால் தனது தாய் சாந்தி, உறவினர்கள் ஜெகதீஸ்வரி, ஹேமாவதி, பூர்விகா, மங்களவதி, கிருஷ்கா, சீதா ஆகியோருடன் மாலை நேரத்தில் காரில் புறப்பட்டுள்ளார்.
காரை முருகன் ஒட்டிய நிலையில், திருத்தணி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பியுள்ளனர். கார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே அரும்பாக்கம் கிராமம் பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் வேகமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கி நிலையில், காரில் சென்ற 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதனால் அலறல் சத்தம்கேட்ட கிராம மக்கள் உடனடியாக உயிருக்கு போராடிய 8 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் மற்றும் அவரது தாய் சாந்தி உயிரிழந்த நிலையில், மற்ற 6 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிளியனூர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.