#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை! இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர்!
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 562பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், இன்று புதிதாக 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனோவை தடுக்க, தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதனை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்தும் தமிழக முதல்வர் இன்று இரவு 7 மணி அளவில் மக்களிடையே உரையாற்ற உள்ளார்.