மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை தவறாக பேசிய நண்பன்.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட நட்பு.. சுடுகாட்டில் பரபரப்பு சம்பவம்.!
மதுபோதையில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை மற்றொரு நண்பன் கொலை செய்ய முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், பானு நகரில் வசித்து வருபவர் பிரித்திவி ராஜ் (வயது 25). இவர் மெக்கானிக்காக இருந்து வருகிறார். தற்போது வரை திருமணம் ஆகவில்லை. பிரித்திவி ராஜின் நண்பர்கள் கொரட்டூர் இமானுவேல் ராஜ் (வயது 23), அம்பத்தூர் மணிகண்டன் (வயது 27). இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று அம்பத்தூரில் உள்ள பானு நகர் சுடுகாட்டில் நண்பர்கள் மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, பிரித்திவி ராஜ் இமானுவேல் ராஜின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இமானுவேல் ராஜ் மற்றும் மணிகண்டன் பிரித்திவி ராஜை அடித்து நொறுக்கி, சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரித்திவி ராஜின் தலை, மூக்கு, வாய் மற்றும் வயிறு உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
நண்பர்களிடம் இருந்து தப்பிய பிரித்திவி ராஜ் இரத்த வெள்ளத்தில் சாலைக்கு வந்து காப்பாற்றக்கூறி கதறியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பிரித்திவி ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆவடி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட பிரித்திவி ராஜ், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் காவல் துறையினர் மணிகண்டன் மற்றும் இமானுவேல் ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.