2ம் கணவருடன் சேர்ந்து முதல் கணவரின் குழந்தையை சிகிரெட்டால் போதையில் சூடுவைத்த பயங்கரம்.!



Chennai baby Torture by Parents

சென்னையில் உள்ள அடையார் சாஸ்திரி நகரை சார்ந்தவர் பானு (வயது 29). இவரின் முதல் கணவர் விமல்ராஜ். தம்பதிக்கு ஏஞ்சல் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், பானு - விமல்ராஜ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில், பானு ஏ.சி மெக்கானிக்கான ஜெகன் ரோஸ் (வயது 37) என்பவருடன் வாழ்ந்து வருகிறார். 

இதற்கிடையில், குழந்தை ஏஞ்சலுக்கு உடல்நிலை சரியில்லை என்று பானு தனது தாயார் கன்னியம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கன்னியம்மாள் வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்தபோது அதன் முதுகில் சிராய்ப்பு காயம், கண், நெற்றி, கை, கால்களில் சிகரெட் சூடு காயங்கள் இருந்துள்ளன.

chennai

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கன்னியம்மாள் குழந்தையை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி குழந்தையின் தாய், தாயின் இரண்டாவது கணவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுவுக்கு அடிமையான இருவரும் குழந்தையை துன்புறுத்தி வந்ததும், சிகிரெட்டால் சூடு வைத்ததும் அம்பலமானது.