#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் ஆசைகாட்டி, சிறுமியிடம் காதலன் சேட்டை.. போக்ஸோவில் உள்ளே தூக்கி வைத்த போலீஸ்.!
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சார்ந்தவர் கோகுல் (வயது 20). இவர் ஆயிரம் விளக்கு பகுதியை சார்ந்த 15 வயது சிறுமியுடன், இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறும் வகையில் கோகுல் பேசிய நிலையில், கோகுலின் காதல் வலையில் விழுந்த சிறுமியும் காதலனோடு பழகி வந்துள்ளார்.
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து நெருக்கமாக பழகி வந்த நிலையில், சிறுமியை கோகுல் ஆசை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோகுலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.