#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகனை கொன்ற கொலையாளிகளை கோர்ட்டில் வைத்தே சம்பவம் செய்ய முயன்ற தந்தை.. பரபரப்பு சம்பவம்.!
சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதை நகரில் வசித்து வருபவர் உதயக்கனி (வயது 60). இவரின் மகன் ஆண்டனி உபால்ட். இவர் கடந்த 2020 ஆம் வருடம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஐயப்பன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகனை கொலை செய்த குற்றவாளிகளை பழிக்கு பழி வாங்க எண்ணி உதயக்கனி கையில் கத்தியுடன் எந்நேரமும் உலாவி வந்துள்ளார்.
இந்நிலையில், ஐயப்பன் மற்றும் கார்த்திக்கை பெரியமேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினர் அழைத்து வந்த நிலையில், கத்தியுடன் வந்த உதயக்கனி இருவரையும் குத்தி கொலை செய்ய பாய்ந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் சுதாரிப்புடன் செயல்பட்டு உதயக்கனியை பிடித்தனர். பெரியமேடு காவல் துறையினர் உதயக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.