#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலிக்க, திருமணத்திற்கு மிரட்டல்.. கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து மிரட்டிய கஞ்சா குடிக்கி..!
தன்னை திருமணம் செய்ய கல்லூரி மாணவியை வற்புறுத்திய கஞ்சா குடிக்கி இளைஞன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான்.
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் வசித்து வரும் பெண்மணி கவிதா (பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது). இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். கவிதாவுக்கு 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள கல்லூரியில் படிக்கிறார்.
இவர் கல்லூரிக்கு சென்று வரும்போது சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் வசித்து வரும் கஞ்சா வியாபாரி ரஷீத் (வயது 28) என்பவன், மாணவியை பின்தொடர்ந்து காதலிக்குமாறு தகராறு செய்துள்ளான். இந்த விஷயம் குறித்து மாணவி தாயார் கவிதாவிடம் தெரிவித்து அழுதுள்ளார்.
இதனால் மாணவியின் தாயும் ரஷீத்தை நேரில் கண்டு கண்டித்து இருக்கிறார். இதனை கேட்காத ரஷீத், உனது மகளை எனக்கு திருமணம் செய்து தா என்று தகராறு செய்துள்ளான். நேற்று மாணவியை பின்தொடர்ந்து வைத்தவன், என்னை நீ திருமணம் செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளான்.
மாணவியோ கஞ்சா வியாபாரியை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறவே, ஆத்திரமடைந்த கையவன் கஞ்சா போதையில் மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து மாணவியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளான்.
இதனால் அதிர்ந்துபோன கவிதா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ரஷீத்தின் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.