மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டிச்சேரியில் அட்ராசிட்டி செய்த சென்னை இளைஞர்கள்; கும்பலாக சேர்ந்து வெளுத்தெடுத்த பொதுமக்கள்.. போதை பாய்ஸ் அலப்பறைகள்.!
தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு இளைஞர்கள் தங்களின் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று.
அங்கு விற்பனை செய்யும் மதுவகைகளை வாங்கி சாப்பிடும் இளைஞர்கள், அவ்வப்போது உற்சாக மிகுதியில் ஆர்வக்கோளாறு போல செயல்பட்டு அல்லோல்படும் சம்பவமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் TN 07 AP 9967 பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் நண்பர்கள் பாண்டிச்சேரி சென்று இருந்தனர். அவர்கள் போதையில் வாகனத்தை இயக்கி சென்றுள்ளனர்.
Evlo Chase pani pidichirkanga apona avanunga pana vela epdi erkum 😤 pic.twitter.com/nRsjFdzvRk
— 𝐉𝐚𝐧𝐲𝐚 🔥 (@Love_Krishnaa) July 12, 2023
அப்போது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் உட்பட 20 வாகனத்தை இடித்து தள்ளிய போதை இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தங்களின் சொந்த வாகனத்தில் காரை இயக்கி சென்றுள்ளனர்.
நீண்ட தூரம் துரத்தி சென்று இளைஞர்களை பிடித்த பொதுமக்கள், அவர்களை தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.