#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமண ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்.. பணியிட காதல் கொடூரங்கள்.!
இளம்பெண்ணிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர், மயிலாப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அமுதவல்லி (வயது 30) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி அருண் கிஷோர் (வயது 32). இவர் அமுதவல்லியை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், அமுதவல்லியிடம் இருந்து அருண் கிஷோர் விலக தொடங்கிய நிலையில், உண்மையை உணர்ந்துகொண்ட பெண்மணி W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அருண் கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.