"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
தறிகெட்டு இயங்கிய கார் மரத்தில் மோதி விபத்து... தாய் - மகன் பரிதாப பலி.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக இயங்கிய கார் மரத்தின் மீது மோதிய விபத்தில், தாய் - மகன் என 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீ வர்மன். இவரின் தாய் பாரதி ரெட்டி. இவர்கள் இருவரும் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது, இவர்களின் கார் பழவேலி பகுதி அருகே வந்த நிலையில், சாலையில் சென்ற மற்றொரு காரை முந்த முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பை கடந்து மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீ வர்மன் மற்றும் தாயார் பாரதி ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விசயம் தொடர்பாக தகவல் அறிந்த செங்கல்பட்டு காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.