மக்களே உஷார்.. கடன் தருவதாக ஆவணங்கள் பெற்று மோசடி கும்பல் கைவரிசை..!



chennai-police-investigated-who-called-a-women

கடன் தருவதாக கூறி புகைப்படம் போன்ற ஆவணங்களை பெற்று நூதன முறையில் மோசடி செய்து வந்த கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள மாதானங்குப்பம் பகுதியில் பெண் ஒருவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரை சில நாட்களுக்கு முன்னதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், இன்ஸ்டன்ட் லோன் மூலம் கடன் வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து பெண்ணுக்கும் பணத்தேவை இருந்ததால் ரூ.30,000 பணம் தேவைப்படுகிறது என அந்த பெண் தெரிவிக்க, மர்ம நபர் உடனடியாக புகைப்படம் போன்ற ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் பெண்ணை தொடர்பு கொண்ட நபர், தொகை தயாராகி விட்டதாகவும் முன்னதாக 3 ஆயிரம் ரூபாய் மட்டும் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, ரூ.30,000 ரூபாயும் முழுவதுமாக கொடுத்தால் தான் நான் அதற்கான வட்டியை தருவேன் எனக் கூறியிருக்கிறார்.

chennai

இதனால் அவரது புகைப்படத்தை தவறாக சித்தரித்த மர்மநபர் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்த பெண் அதிக அளவிலான வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பின் காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.