#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் பைக் ரேஸ் சாகசங்கள்.. நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் சர்ச்சை செயல்..!
சென்னை என்றாலே பலருக்கும் பல நினைவுகள் வரும். ஆனால் இன்றளவு உள்ள இளைஞர்களின் சர்ச்சை செயல்களால் சென்னையின் அடையாளமானது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
அந்த வகையில், சென்னையில் உள்ள தேனாம்பேட்டை அண்ணா சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் இரவு நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சாகசங்கள் செய்வது வழக்கம்.
இதுபோன்ற கும்பலை ஒடுக்குவதற்கு காவல் துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த செயல்கள் குறைந்தபாடில்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் பைக் சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. காவல் துறையினரும் இதுகுறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.