திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Cyclone Michaung: திடீரென ஏற்பட்ட பிரசவ வலி: படகில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்.!
டிசம்பர் 05ம் தேதியான நாளை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜாங் புயல் கரையை கடக்கிறது. இதனால் இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
நகரின் பல முக்கிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பெண்ணை படகு உதவியுடன் மீட்டு விரைந்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பெண்மணி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.