வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
11 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஒன்றாம் தேதி முதல் இரண்டாம் தேதி வரை கேரள-கர்நாடகா கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா, தெற்கு இலங்கை, அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் சூறாவளி காற்று வீசலாம். இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பாளையங்கோட்டை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 39.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.