திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருட்டில் ஈடுபட்டதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை.. 7 கட்டுமான பொறியாளர்கள் உட்பட 8 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு.!
கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில நண்பர்களோடு திருட்டில் ஈடுபட்டு சிக்கிக்கொண்ட 23 வயது இளைஞர் அடித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில் 7 சிவில் எஞ்சினியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, வெங்கடாபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஷாகின்ஷா காதர் (வயது 23). இவர் பி.ஏ பட்டதாரி ஆவார். குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால் காதரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தில் நண்பர்கள் வினோத், ஹேமா ஆகியோருடன் காதர் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அவர்கள் கட்டிடப்பணிகள் நடந்து வரும் இடத்தில கட்டுமான பொருளை திருடி தப்பி சென்றுள்ளனர். இதனைக்கண்ட கட்டுமான ஊழியர்கள் அவர்களை விரட்டிச்செல்லவே, ஹேமா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ஷாகின்ஷா, வினோத் சிக்கிக்கொண்டனர். இருவரையும் அவர்கள் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து நூலிழையில் தப்பிய வினோத் ஓட்டம் பிடிக்க, ஷாகின்ஷா பலத்த காயமடைந்ததால் சுருண்டு விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
அவர்கள் விசாரணை நடத்திவருகையில், ஷாகின்ஷாவின் உறவினர்கள் தவறிழைத்தோரை கைது செய்ய வேண்டி போராட்டம் நடத்தினர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் எஞ்சினியர்களான உமா மகேஸ்வரன் (வயது 33), ஜெயராம் (வயது 30), நம்பிராஜ் (வயது 29), பாலசுப்பிரமணியன் (வயது 29), சக்திவேல் (வயது 29), மனோஜ் (வயது 27), அஜித் (வயது 27), ஊழியர் சிவப்பிரகாசம் (வயது 22) ஆகியோரை கைது செய்தனர்.