#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ்நாட்டை பதறவைத்த சைதாப்பேட்டை இரயில் நிலைய கொலை விவகாரம்; பரபரப்பு தகவல் அம்பலம்.. காரணம் இதோ.!
நீயே ஒழுங்கு இல்லை, எனக்கு நீ ஒழுக்கம் சொல்லி தருகிறாயா? என சொந்த அக்காவின் மீது ஆத்திரம் கொண்டு, கள்ளக்காதல் மோகத்தால் பெண் இரயில் நிலையத்தில் வைத்து மக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில், கடந்த புதன்கிழமை ராஜேஸ்வரி என்ற பெண்மணி 4 பேர் கும்பலால் பொதுமக்கள் முன்னிலையிலேயே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இரயிலில் சமோசா உட்பட தின்பண்டங்கள் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவில் 07:00 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி பயணம் செய்த மின்சார இரயிலில் பயணித்தபோது, சைதாப்பேட்டையில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே காவல்துறை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
பின், இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜேஸ்வரியின் தலை, உடல் பாகங்களில் சரமாரியாக வெட்டுக்காயங்கள் இருந்தன. முகத்தில் மட்டும் 10 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் இரத்தம் அதிகம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து சைதாப்பேட்டை இரயில்வே காவல்துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் இல்லை என்பதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. மாறுபட்ட கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, கொலை வழக்கு தொடர்பாக ராஜேஸ்வரியின் சகோதரி நாகவல்லி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த டாக்கா மணி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
தம்பதிகளுக்கு இமானுவேல் (வயது 11), சோபியா (வயது 7) என 2 குழந்தைகள் இருக்கின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக டாக்கா மணி இயற்கை எய்தியதால், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த புவனேஷை இரண்டாவதாக திருமணம் செய்து சைதாப்பேட்டையில் அனைவரும் வசித்து வருகின்றனர். மணியின் மறைவுக்கு பின்னர் 3 ஆண்களுடன் நெருங்கி, இறுதியில் ஐந்தாவதாக புவனேஷுடன் குடித்தனம் நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளிக்கு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ராஜேஸ்வரி தனது தங்கையை கண்டித்து இருக்கிறார். சக்திவேலையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் சக்திவேல் நாகவள்ளியுடன் அவ்வப்போது தனிமையில் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
ராஜேஸ்வரி தங்கையின் கள்ளக்காதல் விவகாரத்தில் கெடுபிடியுடன் இருந்து வந்த நிலையில், ராஜேஸ்வரியின் முதல் திருமணத்தை அடுத்த 3 விஷயங்கள் சக்திவேல் மற்றும் நாகவல்லி தரப்புக்கு தெரியவந்துள்ளது. இதனை மேற்கோளிட்டு தங்களின் கள்ளக்காதலை நியாயப்படுத்திய ஜோடி, ராஜேஸ்வரியின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளது.
இறுதியாக ராஜேஸ்வரியிடம் சென்று அதுகுறித்து கேட்டு, புவனேஷ் குறித்து விசாரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தங்களின் குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டாம் என கண்டிக்க, அங்கு இருதரப்பு கைகலப்பு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது. இதில் ராஜேஸ்வரி மீது நாகவல்லி, சக்திவேல் ஆகியோர் கோபத்தில் இருந்துள்ளனர்.
தங்களின் கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக இருக்கும் ராஜேஸ்வரியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட நாகவல்லி மற்றும் சக்திவேல், தங்களின் உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து சம்பவத்தன்று திட்டம்தீட்டி கொலை சம்பவத்தை மக்கள் அதிரும் வகையில் இரயில் நிலையத்தில் அரங்கேற்றி இருக்கிறது என்பது அம்பலமானது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.