தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார இரயில் சேவை நாளை பகுதிநேர ரத்து - விபரம் இதோ.!



Chennai Sub Urban Train 

 

சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை சென்றடைய புறநகர் மின்சார இரயில் சேவை பிரதானமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை தாம்பரம் - எழும்பூர் இடையே இயக்கப்படும் இரயில் நாளை பகுதி நேரமாக இரத்து செய்யப்படுகிறது. 

நாளை சுமார் 4 மணிநேரம் 30 நிமிடம் வரை புறநகர் மின்சார இரயில்கள் இயங்காது என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. 

பராமரிப்பு பணிகளுக்காக தாம்பரம் - சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் புறநகர் இரயில்கள் நாளை காலை 11 மணிமுதல் பிற்பகல் 3:30 மணிவரை இயக்கப்படாது. 

44 இரயில் சேவைகள் நிறுத்தப்படுவதால், மக்களின் பயணங்களை மாற்றி திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறது.