திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சரக்கு கேட்டு அடாவடி., தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில இளைஞர்... 3 மணிநேரம் மிரட்டல் முடிவுக்கு வந்த பின்னணி..!
இரயில் நடைமேடை பாலத்தில் இளைஞர் அமர்ந்துகொண்டு 3 மணிநேரம் போக்குக்காட்டிய சம்பவம் நடந்துள்ளது. போக்கிரி போல அடாவடி செய்த இளைஞனை குண்டுக்கட்டாக தூக்கி வந்த அதிகாரிகளின் துரிதமான செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள பொதுமக்களால் அன்றாடம் உபயோகம் செய்யப்படும் போக்குவரத்துகளில் மின்சார இரயில் பயணங்கள் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரையிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையிலும் என மின்சார இரயில்கள் இருவேறு வழித்தடங்களில் பிரதானமாக இயக்கப்படுகிறது.
அதனால் காலை 4 மணியளவில் தொடங்கும் மக்களின் கூட்டம் என்பது இரவு 9 மணிவரை குறையாமல் இருக்கும். இந்த நிலையில், திருவெற்றியூர் இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் இளைஞர் நடைமேம்பாலத்தின் வெளியே ஏறி நின்றுகொண்டு, மேலிருந்து கீழே குதிக்கப்போவதாக அலறிக்கொண்டு இருந்தார்.
இதனைக்கண்ட இரயில் பயணிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு திருவெற்றியூர் இரயில்வே காவல் துறையினர், நகர காவல் துறையினர், தீயணைப்பு & மீட்பு படையினர் ஆகியோர் விரைந்தனர். இளைஞர் கீழே விழுந்தாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தரையில் ஒருகுழு மீட்புக்கு பாதுகாப்பு வலையை விரித்து தயாராக இருந்தது.
ஆனால், இளைஞர் வடமாநிலத்தவர் என்பதால் பேச்சுவார்த்தைக்கு உபயோகம் இல்லாமல் மீட்பு பணிகள் தாமதம் ஆனது. சிறிது நேரம் கழித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்போது, அவர் தனக்கு மதுபானம் வாங்கி தந்தால் இறங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அதிகாரிகள் வேறு வழியின்றி அதையும் வாங்கி அருகில் வைத்துவிட்டு வரச்சொல்லியுள்ளனர்.
அதுவரை அமைதியாக இருந்த வடமாநில இளைஞர், மதுபானம் வந்த பின்னரும் வர மறுத்துள்ளார். கிட்டத்தட்ட 3 மணிநேர பொழுது சென்றுவிட, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு & மீட்பு படையினர் சற்றும் தாமதிக்காமல் இளைஞர் அமைந்திருந்த இடத்திற்கு தாவிகுதித்து சென்று இலாவகமாக அவரை பிடித்துக்கொண்டனர்.
அங்கிருந்த அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து இளைஞரை பாதுகாப்பாக மீது, இரண்டு கை-கால்களையும் தனித்தனியே பிடித்து அலேக்காக தூக்கி வந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 3 மணிநேரம் பரபரப்புடன் சென்ற சம்பவம் ஒருவழியாக விடிவுக்கு வந்ததால் வேடிக்கை பார்த்த மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.