"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கொசுவர்த்தி கனல் தீ பிடித்து, சேலையை போர்த்தி உறங்கிய இளைஞர் உடல் கருகி மரணம்.. மக்களே ஜாக்கிரதை.!
கொசுவர்த்தி சுருளில் இருந்து சேலையில் விழுந்த கங்கு தீப்பிடித்து இளைஞர் பரிதாப மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் பாலகிருஷ்ணா நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜெகதீஷ் (வயது 23). இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வந்த ஜெகதீஷ், வீட்டில் உறங்கியுள்ளார். உறங்கும் போது கொசு தொல்லை இருந்ததால், நள்ளிரவில் கொசுவர்த்தியை ஏற்றிவைத்தவாறு, தாயின் சேலையை போர்த்தி உறங்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சேலையில் கொசுவர்த்தி விழுந்து பற்றிய தீ, ஜெகதீஷின் மீது மளமளவென எரிய தொடங்கியுள்ளது. தீ காயத்துடன் உயிரை காப்பாற்ற ஜெகதீஷ் அலறவே, அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மீட்டுள்ளனர்.
பின்னர், சிகிச்சைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.