#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் முதல் நாளில் கட்டுப்பாட்டை மீறிய 121 வாகனங்களுக்கு அபராதம்; ரூ.12,100 வசூல்.!
தலைநகர் சென்னையில் விபத்துகளை தவிர்க்க, சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தொழில்நுட்ப ரீதியாக தரவுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சென்னையில் உள்ள பெரும்பாலான சிக்னல்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வேகக்கட்டுப்பாடு கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் இணையவழியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வசூலிக்கப்படும்.
இந்நிலையில், நவம்பர் மாதம் 4ம் தேதியான நேற்று முதல் ஆட்டோக்கள் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 40 கி.மீ வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகம் வரையிலும், இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரையிலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் பயணம் செய்த 4 கார்கள் உட்பட 117 இருசக்கர வாகனங்களுக்கு நேற்று ஒரேநாளில் ரூ.12,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ள்ளது என சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
வரும் நாட்களிலும் வேகக்கட்டுப்பாடு என்பது சென்னை மாநகருக்குள் தொடரும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.