#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டு வாசலில் கொடூரம்.. மாமியாரை சரமாரியாக குத்திக்கொலை செய்த மருமகன்.!
மனைவியிடம் சண்டையிட்ட நபர், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று மாமியாரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியை சார்ந்தவர் லதா. இவரது மகள் சுதா. லதா தனது மகள் சுதாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக பெயிண்டர் பாலாஜி என்பவருக்கு சுதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
பாலாஜி - சுதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுதா தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், பெரம்பூரை சார்ந்த நண்பர் திவ்யநாத்துடன் பாலாஜி மாமியார் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாலாஜி தனது மனைவி சுதாவை கத்தியால் வெட்ட முயற்சித்து இருக்கிறார்.
இதனைக்கண்ட லதா மகளின் உயிரை காப்பாற்றிவிட, ஆத்திரத்தில் இருந்த பாலாஜி மாமியார் லதாவை சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத்தை கைது செய்தனர்.