#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடலுக்குள் குளிக்கச்சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்; 3 பேர் மாயம்.!
சென்னையில் உள்ள வியரசர்பாடி பகுதியை சேர்ந்த சிறார்கள் ஷியாம் (வயது 17), சந்தோஷ் (வயது 17), புவனேஷ் (வயது 15), விஜய் (வயது 15). இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அங்கு அனைவரும் கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர், சிறுவன் விஜயை மட்டும் பத்திரமாக மீட்டார்.
பிற மூவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.