#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிஞ்சிலேயே பழுத்த 17 வயது சிறுவனின் பகீர் செயல்.. பாத்ரூமில் இருந்து அலறிய பெண்மணி., செல்போனில் சம்பவம்.!
பெண் குளிப்பதை ஒளிந்துகொண்டு வீடியோ எடுத்த 17 வயதாகும் சிறுவன் பெண்மணி சுதாரித்ததால் காவலர்களால் கைது செய்யப்பட்டான். கைதான சிறுவனின் செல்போனில் இருந்த ஆபாச விடீயோக்களால் அதிகாரிகள் அதிர்ந்துபோன சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், நெல்லித்துறை பகுதியில் வசித்து வரும் 38 வயது பெண்மணிக்கு, திருமணம் முடிந்து 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவத்தன்று பெண்மணி குளிக்க தனது வீட்டின் குளியலறைக்கு சென்றுள்ளார்.
அவர் குளித்துக்கொண்டு இருக்கும் போது, குளியலறைக்கு வெளியே எதோ சத்தம் வந்துள்ளது. இதனால் சத்தம் வந்த இடம் நோக்கி பெண் சென்றபோது, இளைஞர் ஒருவர் ஓடியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண்மணி இளைஞன் குறித்து விசாரித்து கணவனிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து அப்பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, பெண் குளிப்பதை சிறுவன் வீடியோ எடுத்து அம்பலமானது.
இதனால் அவனின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, பல பெண்களை சிறுவன் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்தது உறுதியாகவே, சிறுவனை கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.