#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடிக்கொண்டிருந்த கல்லூரி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி! நடந்தது என்ன? பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!
ஈரோடு நாடார்மேடு எழில் வீதியில் வசித்து வந்தவர் ஹர்ஷினி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை மாணவர்கள் மற்றும் மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரி பேருந்து சென்றுள்ளது.
அப்பொழுது ஹர்ஷினி பேருந்தின் படிக்கட்டின் அருகில் நின்றதாக கூறப்படுகிறது. மேலும் பேருந்தின் கதவும் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் பேருந்து நாடார்மேடு சாஸ்திரி நகர் பகுதியின் வளைவில் மிகுந்த வேகத்துடன் திரும்பியபோது, ஹர்ஷினி தடுமாறி கதவின் மீது விழுந்துள்ளார்.
மேலும் அப்பொழுது நன்றாக மூடப்படாமல் இருந்த கதவு திறந்துகொண்டு ஹர்ஷினி சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக ஹர்ஷினி அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி சாலையில் விழுந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.