#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குறையுது குறையுது!! தமிழகத்தில் கொரோனா வேகமா குறையுது!! வெளியான சூப்பர் தகவல்..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 3 வது அலை வேகமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் கடந்த பல வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துவருகிறது. இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 15 முதல் 20 மாவட்டங்களில் கொரோனா நோயின் பரவல் குறைந்துள்ளது என கூறினார். மேலும், வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் மற்றும் மருத்துவமனைகள் என தற்போது 2,11,000 நபர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும், 5% பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.