தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு?? எதிர்பார்ப்பில் மக்கள்!! முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்??



Corona lockdown may extend in Tamil nadu

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருநாள் இறப்பு எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது.

கொரோனா பரவலை குறைக்க தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

மே 24-ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில் அதனை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முன்பைவிட தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகியிருப்பதால் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.