கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்ள ரோபோக்கள்.. தமிழக அரசின் புதிய முயற்சி..!



Corona patients new robo

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது.

தற்போது புதிய முயற்சியாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க செவிலியர்களாக ரோபோக்கள் செயல்ப்பட உள்ளன.