இந்திய 'குடி'மகனின் விசித்திரமான கோரிக்கை மனு! செய்வதறியாது திகைத்து நிற்கும் மாவட்ட நிர்வாகம்



daily drinker requests for free bus pass

பக்கத்து ஊரில் இருக்கும் அரசு மதுபானக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் குடிமகன் ஒருவர் அளித்த கோரிக்கை மனு ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசால் பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் சென்று பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல தினமும் பக்கத்து ஊரில் இருக்கும் மதுபானக் கடைக்கு சென்று வர தனக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டம் அருகேயுள்ள வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செங்கோட்டையன். இவர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்ற நிலையில், ‘தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும், அப்படித் திறக்காத பட்சத்தில், பக்கத்து ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டுமென்றும் பகீர் கோரிக்கை வைத்தார்.

tasmac

அவரது மனுவை வாங்கிப் படித்த அதிகாரிகள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். அதில் எங்கள் ஏரியாவில் மதுக்கடைகளே இல்லை. பல நாட்களாக மூடியிருக்கும் மதுக்கடையை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மதுகுடிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. குடிக்கவே பணம் பத்தாமல் இருக்க, போக்குவரத்திற்கு கனிசமாக தொகை செலவாகிறது என்னு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் செங்கோட்டையன் அங்கிருந்து சென்றார். மதுபான கடைகளை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில் இப்படி ஒரு குடிமகன் கொடுத்துள்ள கோரிக்கை மனு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.