#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெல்டா மாவட்ட கவிஞரின் கண்ணீர் மல்கும் கவிதை!. படிக்கும்போதே பதறுகிறது!.
கடந்த 16ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய காஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல், முந்திரி மற்றும் பலவகை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. அந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்து மீண்டும் பயிர்களை நட்டு வருமானம் பார்ப்பதற்கு குறைந்தது இன்னும் ஐந்து வருடங்களாவது ஆகும்.
பெரும்பாலும் விவசாயிகள் கடன்களை வாங்கி தான் பயிரிடுவர். பின்பு அறுவடை முடிந்த பிறகு கடன்களை அடைத்து மீதமுள்ள தொகையை தங்களது குடும்ப செலவிற்காக வைத்துக் கொள்வர். ஆனால் இப்பொழுது கஜா புயலால் பயிர்கள் அனைத்தும் முழுவதும் சேதம் அடைந்ததால் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சிக்கல் உண்டாகும். கடன்காரர்கள் வீட்டிற்கு வந்தால் என்ன பதில் சொல்வது என்பதை தெரியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இந்தநிலையில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயத்தை காதலித்த கவிஞரின் உருக்கமான கவிதை முகநூலில் வைரலாகி வருகிறது.
விடியும் முன் எழுந்தவன் வாழ்க்கை விடியாமலே போகிறதே.......விவசாயி
தின்னையோரம்
தென்னை வளர்த்தேன்..
தெருவோரம் புங்கை வளர்த்தேன்..
கொல்லையோரம் கொய்யா வளர்த்தேன்..
மூலையோரம் முருங்கை வளர்த்தேன்..
சந்தோரம் வேம்பு வளர்த்தேன்..
வாசலிலே வாழை வளர்த்தேன்..
பிள்ளையாக எண்ணி வளர்த்தேன்...
பிள்ளையில்லா குறை மறந்தேன்...
தென்னை தேடி தேனீ வந்தது..
புங்கை தேடி புறா வந்தது..
கொய்யா தேடி அணில் வந்தது..
முருங்கை தேடி குருவி வந்தது..
வேம்பை தேடி எல்லாம் வந்தது..
வாழை தேடி உறவு வந்தது..
எங்கிருந்தோ "கஜா" வந்தது என் பிள்ளைகளை கொண்டு சென்றது......
துணையாக நின்ற என் மரமெல்லாம் என்னை தனி மரமாக விட்டுசென்றதென்ன.....
அழுக கண்ணீரில்லை
குடிக்க தண்ணீரில்லை
உறங்க தின்னையில்லை
உதவிக்கு யாருமில்லை
விவசாயி........விவசாயி