#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளி அன்று பட்டாசு எப்போது வெடிக்க வேண்டும் தெரியுமா? மக்களே உஷார்!
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்தது.
இந்தநிலையில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ‘தீபாவளி அன்று(27.10.2019 ) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவமனை, பள்ளிக்கூடம், நீதிமன்றம், புனித தலங்கள், குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது எனவும், அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.