#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மது போதையில் தகராறு.. நண்பனை அடித்துக் கொன்ற போதை ஆசாமி!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கொமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி ஒருவர் சடலமாக கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் இருந்தவர் சாளரப்பட்டியை சேர்ந்த கன்னியப்பன் மகன் சாமிதுரை என்பது தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனை அடிக்கையில் சாமி துறையின் தோல்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இருவரும் சேர்ந்து சாமி திரியை அடித்து கொன்றுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று ராஜபாய்க்கால் கரையில் மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, இவர்கள் மூவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணனும், விக்னேஷும் சேர்ந்த மது பாட்டிலால் சாமி துறையை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.