தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கோவை வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வந்தநிலையில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அந்தவகையில், கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் காட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்து உள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று மட்டும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால், மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.