தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சிஏஏ-வால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? சட்டசபையில் மரண மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகாதில் பிறந்த யாருக்கும், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுகவின் உறுப்பினர் பேசுகையில், சிஏஏ தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார். அந்த கேள்வி எழுந்தவுடனே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பதிலளிக்க முடியாத அளவிற்கு கேள்வி எழுப்பினார்.
தவறான கருத்துக்களைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்..
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 18, 2020
- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு பதிலடி. #TNAssembly #TNGovt pic.twitter.com/EZRnkkINaw
சிஏஏ விவகாரத்தை சொல்லி சொல்லி நாட்டு மக்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் பதில் சொல்கிறோம். தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
தமிழகத்தில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கூறுங்கள். நாங்கள் தீர்வு வாங்கி தருகிறோம். இச்சட்டத்தால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான தகவலை சொல்லி சொல்லி, அமைதியாக இருந்த மாநிலத்தில் குந்தகம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்.
சட்டசபையில் முதல்வர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இந்த கருத்திற்கு வரவேற்க தக்க கேள்வி என தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர்.