திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்ப பிரச்சனை... குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. தென்காசியில் சோகம்..!
தென்காசி வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வருபவர்கள் முருகன் - மீனா தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரியா மற்றும் மோனிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுவுள்ளது. இதனால் முருகன் மீனாவிடம் கடுமையாக சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதில் மனமுடைந்த மீனா தனது 2 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வீடு திரும்பிய முருகன் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது மீனா மற்றும் குழந்தைகள் கிணற்றில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் சடலமாக மிதந்த மீனா மற்றும் குழந்தைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வாசுதேவநல்லூர் போலீசார் இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்