மகள் மீது அதிக பாசம் கொண்ட தந்தை.! தவறி விழுந்த அரிவாள் வெட்டு.! மகள் மற்றும் மருமகன் சம்பவ இடத்திலேயே பலி.!



father-murdered-daughter

திருநெல்வேலி மாவட்டம் நத்தம்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் புலவேந்திரன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு மஞ்சு என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் புலவேந்திரன் தனது மகள் மஞ்சுவிற்கு செல்வம் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இறந்துள்ளன.

மஞ்சுவின் கணவர் செல்வம் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் மஞ்சு குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மஞ்சு தனது குடும்பத்தினருடன் தனது தந்தை புலவேந்திரன் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

Murder

இந்தநிலையில் , மஞ்சுவின் குழந்தைகள் வீட்டின் வெளியே உள்ள சாலை புறங்களில் விளையாடிக்கொண்டிருந்தன. இதனைப் பார்த்த செல்வம் தனது மாமனார் புலவேந்தினை திட்டியுள்ளார். இதனால் மாமனார் மருமகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புலவேந்திரன் மகள் மீதும் பேரக்குழந்தைகள் மீதும் அதிக அளவு பாசம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்த சண்டையில் கோபமடைந்த புலவேந்திரன் அரிவாளை எடுத்து செல்வத்தை தாக்கியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மஞ்சு மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே மஞ்சுவும், செல்வமும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மஞ்சு மற்றும் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புலவேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.