#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"காதலும் தமிழர் அறமே, காதல் செய்யுங்கள் உலகத்தீரே" - செங்கல்பட்டில் போஸ்டர்.!
பிப்ரவரி 14ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் காதல் ஜோடிகள் உலாவந்தனர்.
தனது மனதில் உள்ள அன்பை காதலாக வெளிப்படுத்தும் நாள், இன்றளவில் இளம் தலைமுறையால் வெகுவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் போஸ்டர் ஒன்று மாற்று ஊடக மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், "காதலும் தமிழர் அறமே! காதலர் தின வாழ்த்துக்கள்.. சாதி, மதம், இனம், வர்க்கம், பாலினம் கடந்து, காதல் செய்வீர் உலகத்தீரே.." என பதிவிடப்பட்டுள்ளது.