#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை ஓரங்கட்டிய ஐடி வேலை பார்த்த இளம்பெண்!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இரு தினங்களாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து உள்ளாட்சி தேர்தலில், வெற்றிபெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்த திருநங்கை கவுன்சிலர் ரியா, துப்புரவு பணியாளரார் சரஸ்வதி, 73வயதாகும் பாட்டி தங்கவேலு, 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள், 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி ஆகியோரை பலரும் பாராட்டி வந்தனர்.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ளது பண்டேஸ்வரம் கிராமத்துக்கான பஞ்சாயத்து தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் ரேகா ராமு. 37 வயது நிரம்பிய இவர் ஆரம்பத்தில் சென்னையில் சில ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் தன் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் களமிறங்கினார்.
3 வருடங்களுக்கு முன்பே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த ரேகா, கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 265 ஓட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருடன் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்களை ரேகா தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.