#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதியம் 3.30 மணி..21 வயது இளம்பெண்.. திடீரென வீட்டிற்குள் புகுந்து நடுங்கவைத்த கொள்ளை கும்பல்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதி வேலு நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்-சர்மிளா தம்பதியினர். பார்த்திபன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் சர்மிளாவிடம் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கிழிந்த துணிகளை தைத்து தருவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அந்த இளம்பெண் உள்ளே புகுந்த சில நொடிகளில் திடீரென 5 பேர் வீட்டிற்குள் புகுந்து சர்மிளா மற்றும் அவரது குழந்தையை கத்தி முனையில் மிரட்டி 8 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசில் சர்மிளா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கடந்த 7 ஆம் தேதி பூமிகா மற்றும் பிரசாந்த் என்பவரை கைது செய்தனர். மீதமுள்ள கொள்ளையர்களை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 பவுன் நகை மற்றும் 3 பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.