#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கிழட்டு காமுகன் வெறிச்செயல்..!
மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதிய காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகாமையில் வாண்டரசன் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 50). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி 7 வயது சிறுமி வெளியே விளையாடிக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த சிறுமியை, அவரின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம்பார்த்து சக்திவேல் அங்குள்ள ஓடைக்கு கடத்தி சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி அலறியதால் அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு வர, சக்திவேல் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு ஓடியுள்ளார்.பின் அருகிலிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தற்போது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றதை தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் சிறையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் தி.கலாசெல்வி கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 லட்சம் அரசு வழங்க வேண்டும் என தனது தரப்பில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.