#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காலை உணவு திட்ட பணி மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!
கடலூர் மாவட்டம் தொளார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் அனுசிங் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு ஜெயஸ்ரீ பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு இருந்த ஊழியர்களிடம் நல்லூரில் நடைபெறும் காலை உணவு திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.