#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை.!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் வரும் 10-ஆம் தேதி முதல் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்வுகளை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வக ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு இணைய வழியில் பயிற்சியை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை வினாடி வினாவிற்கு தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.