#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுரை சுங்கச்சாவடியில் டோல்கேட் கட்டணம் கேட்டதால் துப்பாக்கிச்சூடு! அதிர்ச்சி சம்பவம்!
கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று மதியம் காரில் வந்த நபர், சுங்கச்சாவடி கட்டணம் கட்ட மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிப் பிடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த சிவக்குமார் என்று தெரியவந்துள்ளது. இவர் வழக்கு ஒன்றிற்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டு திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.